தீம் படங்களை வழங்கியவர்: kelvinjay. Blogger இயக்குவது.

Best of SFIT

Space

Technology

Physics

Astronomy

Experts

collaboration

» » செயற்கைக் கோள் பூமிக்கு மேலே எந்த இடத்தில் நிலை நிறுத்தப்படுகிறது ?

 

யுனைடெட் நேஷன்ஸ் ஆப் ஸ்பேஸ் (United Nations Of Space) அடிப்படையில் மார்ச் 2019 வரையில் மட்டும்8500 செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன.இதை வானிலை ஆராய்ச்சி செய்வதற்கு நேவிகேஷன் செய்வதற்கும்,விண்வெளி ஆராய்ச்சிக்கு மற்றும் தொலைக்காட்சிநிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வது போன்ற பல வேலைகளை செய்ய பூமிக்கு மேலே ஏவப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள்கள் வானில் எப்படி நிலை நிறுத்தப்படுகிறது என பார்ப்பதற்கு முன்பாக வேறு ஒருமுக்கியமான விஷயத்தையும் நாம் பார்க்கலாம்.

ஒரு பெரிய மலையில் பீரங்கியை வைத்துபேரலல் (parallel)ஆக குண்டை எறிந்தால் அவை பூமியின் மேலே ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு சென்று மீண்டும் விழுந்துவிடும்.இதற்கு காரணம் புவியீர்ப்பு விசை (gravity).அதிகமான ஆற்றலை கொடுக்க அதிக கன் பவுடரை நிரப்பிபீரங்கிக் குண்டை எறிந்தால் ஒரு குறிப்பிட்டஆற்றலில் (Force) பூமியில் விழாமல் பூமியை சுற்றத் தொடங்கும்.

இந்த அனுமான சோதனையை முதலில் கூறியவர் ஐசக் நியூட்டன்.இவரின் இந்த அனுமான சோதனையேவிண்ணில்செயற்கைக்கோளை ஏவிபூமியை சுற்ற வைக்க முதற்படியாக அமைந்தது.

நிலவில் ஒரு பீரங்கியை மலை மீது வைத்து சுட்டால் அது நிலவை ஒருமுறை சுற்றிபீரங்கி இருந்த இடத்திற்கே திரும்பி வரும்.இதற்கு இரண்டு காரணம் உண்டு.நிலவில் வளிமண்டலம் (atmosphere) இல்லை.அதனால்அங்கே வளி மண்டலத்தால் பீரங்கி குண்டிற்கு எந்த தொந்தரவும் ஏற்படாது.மற்றொன்று அங்கே ஈர்ப்புவிசை குறைவு .

ஆனால் பூமியில் வளிமண்டல ஈர்ப்பு விசையால் பாதிக்கப்பட்ட குண்டினால் பூமியை சுற்ற முடியாது.

வளிமண்டலத்தினால் செயற்கைக்கோள் பாதிக்காமல் இருக்ககுறைந்தது 320 கிலோ மீட்டருக்கு மேலே தான்செயற்கைக்கோளை நிலைநிறுத்த முடியும்.இந்த உயரத்தில் பூமியின் ஈர்ப்பு விசையால் செயற்கைக்கோள்பூமியின் மேல் விழாமல் இருக்கஎட்டு கிலோமீட்டர் பெர் செகண்ட் (Kilometer per Second) என்ற வேகத்தில்அவை பயணிக்க வேண்டும்.

அப்பில் ஸ்பேஸ் டெலஸ்கோப் (Hubble Space Telescope) பூமிக்கு மேலே568 கிலோ மீட்டர் வேகத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.இது பூமியில் விழாமல் இருக்க நொடிக்கு எட்டு கிலோமீட்டர்பெர் செகண்ட்(kilometer Per Second) என்ற வேகத்தில் பயணிக்கிறது.அப்பில் ஸ்பேஸ் டெலஸ்கோப் (Hubble Space Telescope)ஒரு முறை பூமியை சுற்ற97 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்கிறது.

பூமிக்கு மேலே செயற்கைக்கோள் மூன்றுவித இடங்களில் நிறுத்தப்படுகிறது .அவை

·       லியோ

·       ஜியோ

·       மியோ

 

லியோஎன்பதுலோஎர்த்ஆர்பிட் (low earth orbit) அதாவது பூமிக்குமேலே100 முதல் 2000 கிலோ மீட்டர்உயரத்தில் ஒரு செயற்கை கோள் நிலைநிறுத்தப்பட்டால் அது லியோ செயற்கை கோள் என்பர். இந்த உயரத்தில் செயற்கை கோள் பூமியில் விழாமல் இருக்க7.84 முதல் 6.9 கிலோமீட்டர் பெர் செகண்ட்(kilometer Per Second)என்ற வேகத்தில் பயணிக்க வேண்டும்.இந்த வேகத்தில் பயணித்தால் மட்டுமே அவை பூமியை சுற்றி வர முயலும்.லியோ வகைசெயற்கை கோள்86 முதல் 127நிமிடத்தில் பூமியை ஒரு முறை சுற்றி வந்துவிடும்.லியோ செயற்கை கோள் தகவல் பரிமாற்றத்திற்கும்,உளவு பார்ப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் (International Space Station)இந்த லோ எர்த் ஆர்பிட்டில் (Low Earth Orbit)தான் சுற்றுகிறது.

ஜியோ என்பது ஜியோ சிங்கர்னஸ் எர்த் ஆர்பிட்(Geo Synchronous Earth Orbit).பூமிக்கு மேலே 35862அடி உயரத்தில்ஒரு செயற்கைக்கோள் நிலைநிறுத்தபட்டால் அதை ஜியோசெயற்கைக்கோள் என்பர்.இந்த உயரத்தில் இருக்கும் செயற்கைக்கோள் பூமியில் விழாமல் இருக்கமூன்று கிலோமீட்டர் பெர் செகண்ட்(Kilometer Per Second) என்ற வேகத்தில் பயணிக்க வேண்டும்.இது பூமியை சுற்றிவர 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.இந்த செயற்கைக் கோள்கள் பூமியின் சுழற்சியுடன் இணைந்து சுற்றுகிறது.இதனால் இது பூமிக்கு மேலே எப்பொழுதும் ஒரே இடத்தில் நிற்கும்ஜியோசெயற்கைக்கோள்கள் தான் ஒளிபரப்புவதற்கு பயன்படுத்தப்படுகின்றன.இந்த செயற்கைக் கோள்களால் தான் நாம் ஆக்கி (Hockey),கிரிக்கெட் (Cricket) ,கால்பந்து (Football) போன்ற விளையாட்டுகளை நேரலையாக (Live)பார்க்க முடிகின்றது.

மியோ என்பது மீடியம் எர்த்ஆர்பிட் (Medium Earth Orbit) . லியோவிற்கும் ஜியோவிற்கும் இடையில் இருக்கும் செயற்கைக்கோள்களே மியோ.இவைபூமியை ஒரு முறை சுற்றி வர12 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.மியோ செயற்கைக்கோள்கள்வழிகாட்டுவதற்காக(Navigation) அதாவதுஜிபிஎஸ் (GPS) போன்றசாதனங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றது.

சமீபத்தில் ஜியோ மற்றும் நியூ செயற்கைக்கோள்களைஒன்றாக பயன்படுத்தி குவாண்டம் ஆஃப் தசி (Quantum Of The Sea) என்ற சொகுசு கப்பலில்இணையதளம் (Internet)ஜிபிஎஸ் (GPS) போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. 

 

«
Next
புதிய இடுகை
»
Previous
This is the last post.