ஒரு நட்சத்திரத்தின் ஆயுட்காலம் முடியும்போது மிகப்பெரிய அளவில் வெடிக்கும் இதனையே சூப்பர்நோவா என்கின்றோம். நமது பால்வெளியாண்டதில் ஒவ்வொரு 100 வருடத்திற்கு ஒருமுறை ஏதாவது ஒரு நட்சத்திரம் வெடித்து சூப்பர்நோவாவாக மாறுகிறது.
இந்தவெடிப்பின்போது தோன்றும் ஒளியானது அண்டத்தையே பிரகாசிக்க செய்யும் சக்திகொண்டது. ஒரு நட்சத்திரத்தின் நிறையை பொறுத்து அதன் ஆய்வுக்காலம் இருக்கும். அதிக நிறைகொண்ட நட்சத்திரம் சிலலட்சம் ஆண்டுகளிலையே வெடித்துவிடும்! ஆனால் நமது சூரியன் அளவு நிறைகொண்ட நட்சத்திரம் வெடிக்க பலகோடி ஆண்டுகள் ஆகும்!
நமது சூரியனைவிட 8 மடங்கு அதிக நிறைகொண்ட நட்சத்திரமே சூப்பர் நோவாவாக மாற்றம் அடைகிறது! அதேபோல ஒருநட்சத்திரம் 25 மடங்கு நமது சூரியனைவிட அதிக நிறைகொண்டிருந்தால் அது கருந்துளையாக (blackhole) மாற்றம் அடைகிறது!
நட்சத்திரம் ஏன் வெடிக்கிறது என்பதைப்பற்றி பார்ப்போம்
நட்சத்திரம் ஒரு nuclear reactor போன்று செயல்படுகிறது. நட்சத்திரத்தில் உள்ள ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் இணைந்து ஒரு நட்சத்திரம் எரிய தேவையான சக்தியை கொடுக்கிறது. இவ்வாறு நாடாகும் நிகழ்வில் ஹைட்ரஜன் குறையத்துவங்கினால் ஹைட்ரஜன் இரும்போடு இணைந்து எரியதுவங்கும். இந்த நிகழ்வின்போது நட்சத்திரத்தின் மையம் சுருங்கி அதன் வெளிப்புறம் விரிவடைய துவங்கும். இப்படி விரிவடையும் நட்சத்திரம் Red giant-ஆக மாறிவிடும்.
நம்முடைய சூரியனும் இதுபோல redgiant-ஆக மாறி அதன் பின்பு white dwarf -ஆக மாறிவிடும். நமது சூரியனைவிட 8 மடங்கு அதிக நிறைகொண்ட நட்சத்திரத்தில் மையப்பகுதி சுருங்கிய பின்னர் அவை வெடித்து சிதறிவிடும் . இந்த வெடிப்புநிகழ்வின் பொது நட்சத்திரத்தின் வெப்பநிலை 1 லட்சம் டிகிரி வரை உயரும். இத்தகைய அதீத சக்தியோடு வெடிக்கும் நிகழ்வையே சூப்பர்நோவா வெடிப்பு என்கின்றோம்!
இந்த வெடிப்பில் அதிக அட்டாமிக் எண்கள் கொண்ட இரும்பு,வெள்ளி,தங்கம் போன்ற உலோகங்கள் மற்றும் uranium தோற்றம் பெறுகிறது. சூப்பர்நோவாவால் உண்டான தூசுக்கள் மேகங்களாக ஒன்றாகி வானில் பிரகாசிக்கிறது. இதனையே நெபுலா என்று அழைக்கிறோம்!