தீம் படங்களை வழங்கியவர்: kelvinjay. Blogger இயக்குவது.

Best of SFIT

Space

Technology

Physics

Astronomy

Experts

collaboration

» » கருந்துளையை கண்டுபிடித்தது எப்படி?


கருந்துளை இருப்பதை கண்டறிவது கடினம் .ஏனெனில் அவை இருப்பை தொலைநோக்கியால் பார்க்க முடியாது என்று அறிவியலாளர்கள் கருதினர்.

அதற்கு ஒரு காரணம் இருந்தது கருந்துளையின் ஈர்ப்பு விசையானது மிக அதிகம். அதன் ஈர்ப்பு விசையில் இருந்துஒளி கூட தப்ப முடியாது .அதனால் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கருந்துளையை படம் பிடிக்க இயலாது என்று கூறிவந்தனர்.இன்று நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஒரே ஒரு தொலைநோக்கி வைத்து நம்மால் கருந்துளையை படம் பிடிக்க இயலாது.

ஆதலால் உலகில் வெவ்வேறு பகுதியில் உள்ள எட்டு ரேடியோ தொலை நோக்கியை அதிசக்திவாய்ந்த அட்டாமிக் கடிகாரங்களை கொண்டு ஒருங்கிணைத்துகருந்துளையை படம் பிடித்து உள்ளனர். இந்த ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியை இவன் Event Horizon Telescope என்று அழைக்கின்றனர்.

பொதுவாக பிரபஞ்சத்தில் ஒளிரும் பொருட்களில் இருந்து வெளிவரும் ஒளியானது நேராகத்தான் பயணிக்கும். அவற்றை ஒரு தொலைநோக்கியை வைத்து கண்டுபிடிக்கலாம்.ஆனால் கருந்துளையின் Event Horizon பகுதியை சுற்றி  உள்ள ஒளி வட்ட வடிவிலான சிற்றலையாக தான்பயணிக்கும்.அதாவது நம் குளத்தில் வரும் அலைகளை போலஇப்படி வரும் அலைகள் நம் பூமிக்கு வரும் போது நேரான அலையாகவே தொலைநோக்கியில் பதிவாகும் .அதனால்கருந்துளையை படம் பிடிக்க முடியாது.

ஆனால் வெவ்வேறு இடங்களில் இருக்கும் தொலைநோக்கியில் இவற்றை பதிவு செய்து அவற்றை ஒருங்கிணைத்தால் கருந்துளையின் படத்தை பதிவு செய்ய முடியும்.

இப்படி பதிவு செய்து படம் பிடிக்கப்பட்டதே Messier 87 ல் உள்ளsuper massive கருந்துளை.8 ரேடியோ தொலைநோக்கிகளை இணைத்தால் இவற்றை ஆய்வு செய்யும் திறன் மிக அதிகம்.அதாவது நமது பூமியின் அளவிற்கு ஒரு தொலை நோக்கியை இருந்தால் அதற்கு எவ்வளவு சக்தி இருக்குமோ அதே அளவு சக்தியை இந்த எட்டு தொலைநோக்கிகளை இணைத்தால் பெற முடியும்.

இந்தEvent Horizon தொலைநோக்கியால் படம் எடுக்கப்பட்ட கருந்துளை நமது பூமியிலிருந்து 55 மில்லியன் ஒளியாண்டு தொலைவில் உள்ளது இந்தக் கருந்துளையானது vinko விண்மீன் கூட்டத்தில் உள்ள Messier 87 என்ற பிரம்மாண்ட Galaxyன் மையப்பகுதியில் உள்ளது.

இந்தக் கருந்துளையின் நிறையானது நமது சூரியனை விட 6.5 பில்லியன் மடங்கு அதிகம்.கருந்துளை எப்படி இருக்கும் என்று ஐன்ஸ்டின் இன் General Relativity Theory படி இந்தக் கருந்துளை இருக்கிறது .

இந்தக் கருந்துளையின் வெளிப் பகுதியில் இருக்கும் பிரகாசமான ஒளியை அக்ரிசியன் டிஸ்க் என்பர். இந்த பிரகாசமான ஒளி ஒரு நட்சத்திரத்தின் கருந்துளையின் அருகே வரும் பொழுது அது கருந்துளையால்ஈர்க்கப்படும் போது  இதுபோன்ற பிரகாசமாக ஒளி தெரியும்.

இந்தப் புகைப்படத்தில் பிரகாசமான மையத்தில் இருட்டாக இருக்கும் மையத்தின் அளவு 25 பில்லியன் மைல்கள்.இதுதான் இது கருந்துளை என்பதற்கு ஆதாரம்.

இதுவரை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கருதியது போன்றே இந்த கருந்துளை இருக்கிறது. இந்தக் கருந்துளையை சுற்றி இருக்கும் பிரகாசமான பகுதியே Event Horizon. இந்த Event Horizon பகுதியை தாண்டினால் ஒளிகூட வெளிவர முடியாது. அதனால் தான் Event Horizon பிறகு இருட்டாக இருக்கிறது.

Event HorizonTelescope ன் குழு அடுத்து நமது பூமிக்குஅருகில் உள்ள நமது பால்வெளி அண்டத்தின் மையத்தில் உள்ள கருந்துளையை ஆராய போகின்றனர்.

Messier 87 உள்ள கருந்துளை விட சிறியது. அதனால் இதனை பாடம் படிப்பது கொஞ்சம் கடினம் .இருந்தாலும் Messier 87 உள்ள கருந்துளையை ஆராய்ந்து படம் பிடிக்க இரண்டு வருடம் எடுத்துக்கொண்டது. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக் கொண்டால் மற்ற கருந்துளைகள் எப்படி இருக்கும் என்பதையும் அறிய முடியும்.

படம் பிடிக்கப்பட்ட இந்தsuper massive கருந்துளையை பற்றி 200க்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த கண்டுபிடிப்பு கருந்துளையின் ஈர்ப்பு விசை மற்றும் பிரபஞ்சத்தின் இயக்கம் பற்றிய நமது புரிதலுக்கு துணைபுரியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்

«
Next
புதிய இடுகை
»
Previous
பழைய இடுகைகள்