தீம் படங்களை வழங்கியவர்: kelvinjay. Blogger இயக்குவது.

Best of SFIT

Space

Technology

Physics

Astronomy

Experts

collaboration

» » பெங்களூர் பெரும் சத்தத்தின் பின்னால் இருக்கும் காரணம்

 

1880 ஆம் வருடம் Austrian physicist ஆன Ernest Machவாயுக்களில்சூப்பர் சோனிக் flow பற்றி shadow graph என்ற முறையில் ஆய்வு செய்தார். அந்த ஆய்வின் போது துப்பாக்கியின் தோட்டாவை படம் பிடிக்கும்போது தோட்டாவின் முன்பகுதியிலும் பின்பகுதியிலும் ஒரு அதிர்ச்சி அலையானது உருவாகியுள்ளதை அவர் கண்டுபிடித்தார்.இது compressibility என்ற நிகழ்வுக்கு ஒரு ஆதாரமாக அமைந்தது.இந்த ஆதாரம்Mach எனப்படும் ஒரு புதிய அளவீட்டை கொண்டு வந்தது .

Mach நம்பர் என்பது ஒரு பொருளின் வேகத்திற்கும் சத்தத்தின் வேகத்திற்கும் இடையே உள்ள ratio தான்.

mach number =  speed of the object / speed of the sound

நம்மை சுற்றி இருக்கும் காற்றில்அதிகப்படியான molecules இருக்கும்.இந்த molecules நாம் compress செய்யும் பொழுது மிகப்பெரிய மோதல் ஏற்படும் .இந்த மோதலின் போது ஒருஅதிர்ச்சி அலையை உருவாக்கும் .இந்த அதிர்ச்சி அலைதான் நமக்கு boom என்ற சத்தத்தை ஏற்படுத்துகிறது .இதைத்தான் நாம் sonic boom என அழைக்கிறோம் .

 

sonic boomஎன்றால் என்ன என்பதை நாம் புரிந்து கொள்வதற்கு முன்னால் சத்தம் எவ்வாறு பயணிக்கிறது என்பதை காண்போம்.ஒலி அலையானது ஒரு sphere வடிவத்தில்தான் பயணிக்கும். உதாரணத்திற்கு ஒரு கல்லை தூக்கி தண்ணீருக்குள் போட்டால் அந்த தண்ணீரில் அந்தக் கல் உண்டாக்கிய அலை எவ்வாறு போகிறதோ அதேபோல் தான்ஒலி ஒரே வடிவத்தில் எல்லா திசையிலும் பயணிக்கும்.

 

ஒலி அலை ஒரு அதிர்வை உண்டாக்கும். இந்த அதிர்வு காற்றில் ஒரு அழுத்தத்தை உருவாக்கி எல்லா திசைகளையும் தொடர்ந்து பயணிக்கும்.ஒலி எவ்வாறு பயணிக்கும் என்பதை நாம் பார்த்துவிட்டோம்.

 

இன்னும் இதை தெளிவாக புரிந்துகொள்ள மூன்றுவித்தியாசமான எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

Sound source மற்றும் observer ஒரே இடத்தில் இருக்கும் பொழுது ஒலி எவ்வாறு பயணிக்கிறது என்பதை முதலில் பார்க்கலாம்.

 

 உதாரணத்திற்குதொலைக்காட்சியை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் தொலைக்காட்சியில் 50%என சத்தத்தை நீங்கள் செட் செய்து தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தால் உங்களுக்கு டிவியில் இருந்து வரும் ஒலி ஒரே அளவில் கேட்டுக்கொண்டிருக்கும்.அதாவது சீரான இடைவெளியில் கேட்டுக்கொண்டிருக்கும். இதில் எந்தவித மாற்றமும் இருக்காது.ஒருவேளை நீங்கள் எழுந்து தொலைக்காட்சிக்கு பக்கத்தில் சென்று உட்கார்ந்தால் சத்தம் அதிகமாக கேட்கும் ஒருவேளை நீங்கள் அமர்ந்திருக்கும்நிலையை விட்டு பின்னால் இன்னும் தள்ளி சென்றால் அப்பொழுது தொலைக்காட்சியிலிருந்து வரும் சத்தம் உங்களுக்கு குறைவாக கேட்கும்.

 

 இப்பொழுது இரண்டாவது உதாரணத்தைப் பார்க்கலாம் sound source நகர்ந்து கொண்டிருக்கும் observer ஒரே இடத்தில் இருக்கும் பொழுது

என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.ஒரு அவசர ஊர்தியை நாம் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். ஒரு அவசர ஊர்தி வேகமாக சென்று கொண்டிருக்கிறது என எடுத்துக்கொள்ளலாம் .ஆனால் நாம் ஒரே இடத்தில் நின்று கொண்டு இருக்கிறோம் .அப்போது அவசர ஊர்தி நம்மை நோக்கி நம் பக்கத்தில் வரும்பொழுதுஅவசர ஊர்தியை சுற்றியுள்ள காற்று moleculesமாறிக் கொண்டிருக்கும். இந்த காற்று moleculesயைஅவசர ஊர்தி compress செய்யும் , இதே நேரத்தில் அவசர ஊர்திக்கு முன்னால் உள்ள ஒலி அலையும் compressசெய்து கொண்டே வரும் .அதனால் அவசர ஊர்தி நம் அருகில் வரும் பொழுது அதிகமான ஒலியை நம்மால் கேட்க முடியும்.அவசர ஊர்தி நம்மை கடந்து சென்ற பிறகுஅங்கே compressed ஆன காற்றுஇருக்காது. அதனால் அவசர ஊர்தி நம்மை கடந்து அதிக தொலைவு சென்று விட்டால் அவசர ஊர்தியில் இருந்து வெளியான அந்த சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு கேட்காமல் போய்விடும்.


சத்தம் 343 meter / second என்ற வேகத்தில் பயணிக்கிறது.ஒரு பொருள் ஒலியை விட அதிகமான வேகத்தில் பயணிக்கும் பொழுது என்ன நடக்கிறது என்பதை நாம் இப்பொழுது பார்க்கலாம் .பொதுவாக sphere வடிவத்தில் பயணிக்கும் என்று நமக்குத் தெரியும்.இப்பொழுது ஒரு பொருள் சத்தத்தை விட அதிக வேகத்தில் பயணிக்கும் பொழுது அந்தப் பொருளில் இருந்து வெளியாகும் இந்த ஒலி அலையானது அதிகspheres ஆக தொடர்ந்து பயணிக்கும். இந்த எல்லா spheresகளையும்நாம்ஒன்றாக்கினால் ஒரு cone வடிவத்தில் இந்த ஒளி பயணிப்பதை நம்மால் பார்க்க முடியும்.இந்த coneடைய முனைப்பகுதி தரையில் படும் பொழுது சோனிக் என்ற சத்தத்தை நம்மால் உணர முடியும்.

 

பெங்களூரில் இந்த வித்தியாசமானபூம் சத்தம் கேட்டதற்கு காரணம் என்னவென்றுபாதுகாப்புத்துறை விளக்கம் அளித்துள்ளனர்.SU30MKI என்ற விமானம் பயிற்சியில் ஈடுபடும் பொழுது தான் இந்த சத்தம் கேட்டதாக பாதுகாப்புத் துறை விளக்கம் அளித்துள்ளது.பொதுவாக சூப்பர்சோனிக் வேகத்தில் பறக்கும் விமானங்கள் குறைந்த உயரத்தில் பறக்க மாட்டார்கள். எப்பொழுதும் அதிகமான உயரத்தில் தான் பறப்பார்கள். ஆனால் பெங்களூரில் அவர்கள் குறைந்த உயரத்தில் பறந்ததால் இந்த சத்தம் தரையில் உணரப்பட்டுள்ளது.

 

விமானத்தால் தான் இந்த சத்தம் உருவாகியுள்ளது என்றால் விமானத்தை நம்மால் ஏன் பார்க்க முடியவில்லை என தற்பொழுது பார்க்கலாம். விமானத்தின் சத்தத்தை நாம் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது விமானம் 80 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவை அடைந்திருக்கும்.பெங்களூரில் கேட்ட அந்த வினோதமான சத்தத்திற்கு காரணம் இது தான்.

«
Next
புதிய இடுகை
»
Previous
பழைய இடுகைகள்